சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.
நேற்று (ஜனவரி 27) பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்திருக்கும் உதிரன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், கங்குவா படம் குறித்து ஒரு இன்டர்வியூவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “கங்குவா படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
நடிகர் பாபி தியோல் உதிரன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு ஸ்ட்ராங்கான வில்லனாக பாபி தியோலின் கதாபாத்திரம் அமைத்திருக்கிறது. பாபி தியோலுக்கென ஒரு தனி பாடல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலின் விஷுவல்ஸ் அசத்தலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஃபேண்டஸி கலந்த சரித்திர படமாக உருவாகும் கங்குவா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு கங்குவா படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக கிராஃபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருப்பதால் இரவு பகலாக படக்குழுவினர் உழைத்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
போர் டீசர்: அர்ஜுன் தாஸ் Vs காளி தாஸ் ஆக்சன் ஆரம்பம்!
பயன்பாட்டுக்கு வரும் 4,200 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!
