‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

Published On:

| By Minnambalam Login1

kanguva madras hc case

கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் தான் வாங்கிய கடன் பாக்கியை நாளை செலுத்தி விடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சூர்யா, பாபி தியோல், ஜெகபதி பாபு, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில், சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘கங்குவா’.

இந்த படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஒரு வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் போஸ்டர்கள் மற்றும் Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கங்குவா படத்திற்கு தடை விதிக்கக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அதில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் வாங்கிய  ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியைத் திரும்ப வழங்காததால் கங்குவா படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நவம்பர் 7 வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது.

இந்த நிலையில் இன்று(நவம்பர் 7) நடந்த விசாரணையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் தரப்பு உறுதியளித்தது.

இதையடுத்து வழக்கின் விசாரணை நாளை(நவம்பர் 8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணா… கிருஷ்ணசாமி கைது!

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ : விரைவில் ரிலீஸ் !

அதிமுக உரிமையியல் வழக்கு: நீதிபதி விலகல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share