தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
காங்கேயம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

காங்கேயம் தொகுதியை பார்ப்போம்.. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிற தொகுதி.. அதிமுகவில என்.எஸ்.என். நடராஜ் போட்டியிடுகிறார்.. போன தேர்தலில் கடுமையான போட்டி இருந்தது.. 7,331 வாக்குகள் வித்தியாசத்துலதான் சாமிநாதன் ஜெயிச்சிருந்தாரு.
இந்த முறை திமுக சார்பில் மீண்டும் அமைச்சர் சாமிநாதன் களம் காண்கிறார். என்எஸ்என் நடராஜ், தவெக சார்பில் மணி, நாதக சார்பில் கார்மேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக -44 %
அதிமுக -37%
தவெக-12%
நாதக – 6 % வாக்குகள் பெறும்
அமைச்சர் சாமிநாதன் மீண்டும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
