பாலிவுட்டில் உருவாகும் இராமாயணம்: கங்கனா எதிர்ப்பு!

Published On:

| By christopher

அரசியல், சினிமா, சமூகம் மட்டுமல்லாது, சக நடிகர் நடிகைகள் பற்றியும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரணாவத்.

பத்திரிகைகள் அரசியல், சினிமா பிரபலங்கள் பற்றி பெயரை குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடுவது வழக்கம்.

ADVERTISEMENT

அந்த பாணியில் நடிகை கங்கனா ரணாவத் ரன்பீர் கபூர், ஆலியா பட், கன்னட நடிகர் யஷ் ஆகியோரது பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் அவர்கள் பற்றிய விமர்சனம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இராமாயணத்தை தழுவி தயாரிக்கப்பட உள்ள படத்தை நிதிஷ் திவாரி  இயக்க உள்ளார். இந்த படத்தில்  ராமர் வேடத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், சீதையாக ஆலியா பட், ராவணனாக கன்னட நடிகர் யஷ் நடிக்க உள்ளனர்.

ADVERTISEMENT
kangana ranaut teased ranbir

என்ன மாதிரியான கலியுகம் இது?

இதைப்பற்றி நேரடியாக எந்த விமர்சனமும் கூறாமல் மறைமுகமாக தனது சமூக வலைதள பக்கத்தில்,

ADVERTISEMENT

“சமீபத்தில் அடுத்து வர உள்ள பாலிவுட் இராமாயணம் பற்றிய செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன். ஒரு ஒல்லியான வெள்ளை எலி, நடிகர் என்று அழைக்கப்படுபவர். அவருக்குக் கொஞ்சம் சூரிய ஒளியும், மனசாட்சியும் தேவைப்படுகிறது.

திரைத் துறையில் உள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் கேவலமான பி.ஆர். செய்து பிரபலமடைந்தவர். போதைப் பழக்கத்திற்கும், பெண்கள் பின்னால் சுற்றியதற்கும் பெயர் பெற்றவர்.

ஒரு டிரையாலஜி (யாரும் பார்க்காத அல்லது அதிக பாகங்களை உருவாக்க விரும்பாத) படத்தில் தன்னை சிவபெருமானாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தவர். இப்போது ராமபிரானாக வர ஆசைப்படுகிறார்.

வால்மீகியின் விளக்கத்தின்படி, தனது நிறம், நடத்தை மற்றும் முகத்தோற்றத்தில் ராமனைப் போலவே இருக்கும் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார், தன்னைத் தானே வளர்த்துக் கொண்டவர் என்று அறியப்பட்ட நடிகருக்கு ராவணன் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான கலியுகம் இது? போதைக்கு அடிமையான வெளிறிய தோற்றமுடைய ஒருவர் ராமபிரானாக நடிக்கக் கூடாது, ஜெய் ஸ்ரீராம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

kangana ranaut teased ranbir

உன்னை சாகும் வரை அடிப்பேன்

மேலும்ஆபத்தைக் குறிக்கும் எமோஜி ஒன்றைப் பதிவிட்டு,

“நீ என்னை ஒரு முறை அடித்தால் நான் உன்னை சாகும் வரை அடிப்பேன், என்னுடன் பிரச்னை வேண்டாம், விலகி இரு எனவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரன்பீர் கபூர் கடந்த வருடம் வெளிவந்த ‘பிரம்மாஸ்திரா – 1  படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அடுத்து அவரும் அவருடைய மனைவி ஆலியா பட், ‘கேஜிஎப்’ நடிகர் யஷ் ஆகியோர் நடிக்க நிதிஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ படத்திற்காக டெஸ்ட் ஷுட்டிங் பங்கேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனால்தான் கங்கனா இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் என இந்தி திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இராமானுஜம்

தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ரூட் வெஜ் அல்வா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share