‘தலை கொய்யப்படும்’ : கங்கனா போலீசுக்கு ஓடியது ஏன்?

Published On:

| By Kumaresan M

நடிகை கங்கனா ரனாவத் எமர்ஜென்சி என்ற படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. படத்தில் காலிஸ்தான் போராட்டத்தின் ஜெர்னெயில் சிங் பிந்தரன்வாலாவை தீவிரவாதி போல சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்துக்கு சீக்கிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோசியல் மீடியாவில் கங்கனாவை மிரட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’எமர்ஜென்சி படம் வெளியாகட்டும் சீக்கியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாரு… உன் படத்துக்கு செருப்படி விழும்’ என்று ஒருவர்  கூறுகிறார்.

மற்றொருவர் ’இந்திரா காந்திக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? அதுதான் உனக்கும் நடக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வீடியோவில்  விக்கி தாமஸ் சிங் என்பவர் தன்னை சோசியல் மீடியாவில் பிரபலமானவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவர், இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சாவந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை புகழ்ந்து பேசுகிறார். மேலும், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் கங்கனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கங்கனா ரனாவத் , பஞ்சாப் டி.ஜி.பி, மகாராஷ்டிரா டிஜிபி, ஹிமாச்சல் பிரதேச டி.ஜிபிக்களை டேக் செய்து, தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கங்கணா நடித்த எமர்ஜென்சி படம் சீக்கியர்களை தீவிரவாதிகள் போலவும்  பிரிவினைவாதிகள் போலவும் காட்டியிருப்பதாகவும் ஏற்கனவே பல சீக்கிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆஜர்: ஏன்?

ஜூனியர் ஆர்டிஸ்ட் அம்மாவை கூட விட்டு வைக்கல : நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் மீது புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share