”அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் தான்” : கான்களை வம்பிழுக்கும் கங்கனா

Published On:

| By christopher

Kangana Ranaut Controversial reacts

அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் இல்லை என்றால், இந்தியாவில் வேறு யாருக்கு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது? கான்களுக்கா? கபூர்களுக்கா? யாருக்கு? என மதத்தையும், சமூகத்தையும் குறிப்பிட்டு எதிர்கேள்வி எழுப்பியுள்ளார் கங்கனா ரணாவத்.

இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் சினிமா நடிகை இவரே.

ADVERTISEMENT

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா ரணாவத், “நான் ராஜஸ்தான் சென்றாலும், மேற்கு வங்கம் சென்றாலும், மணிப்பூர் சென்றாலும் எனக்கு அன்பும் மரியாதையும் அபரிமிதமாக கிடைப்பதை உணர்கிறேன். அமிதாப் பச்சனுக்குப் பிறகு இதுபோன்ற அன்பும் மரியாதையும் ஒருவருக்கு கிடைக்குமென்றால், அது எனக்கு மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.

கங்கனா ரணாவத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. நெட்டிசன்கள், எதிர்கட்சியினர் பலரும் கங்கனா ரணாவத்தின் இந்த பேச்சை கட் செய்து மீம்களாக பகிர்ந்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தனக்கு எதிராக செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதில் கூறி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“இந்தியாவிலும், அதன் மாநிலங்களிலும் ஒரு கலைஞராக எனது கலைக்கும், அதே நேரம் ஒரு தேசியவாதியாக எனது நேர்மைக்கும் அதீத அன்பும், வரவேற்பும் கிடைக்கிறது என தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். நடிப்பு மட்டுமின்றி, பெண்கள் முன்னேற்றத்துக்கான என்னுடைய செயல்பாடுகளும் பரவலாக பாராட்டப்படுகின்றன. ஆட்சேபனை தெரிவிப்பவர்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

ADVERTISEMENT

அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் இல்லை என்றால், இந்தியாவில் வேறு யாருக்கு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது? கான்களுக்கா? கபூர்களுக்கா? யாருக்கு? எனக்கு தெரிந்தால், நான் என்னை திருத்திக் கொள்கிறேன்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”அந்த பதிலுக்காக தான் நேரில் வந்தேன்” : சின்னதுரையை பாராட்டிய தாடி பாலாஜி

சவுக்கு சங்கரோடு பேசிய திமுக புள்ளிகள், ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share