கிச்சன் கீர்த்தனா: கானங்கத்த மீன் புட்டு

Published On:

| By christopher

kanakatha meen puttu recipe

மீன் வறுவல், மீன் குழம்பு என்று சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள், மீன் வகையில் வித்தியாசமாக, சுவையாகச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், கானாங்கெளுத்தி என்றும் சொல்லப்படும் கானங்கத்த மீனில் புட்டு செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

ADVERTISEMENT

கானங்கத்த மீன் – ஒரு கிலோ
துருவிய தேங்காய் – 200 கிராம்
வெங்காயம் – 400 கிராம்
பச்சை மிளகாய் – 10
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 100 கிராம்
மிளகுத்தூள் – 100 கிராம்
சீரகத்தூள் – 50 கிராம்
மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 150 மில்லி

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

முழு மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு போட்டு சூடான நீரில் கொதிக்கவைக்கவும். பின்னர் மீனிலிருந்து முள்ளை எடுத்துவிட்டு சதையை மட்டும் எடுத்து நன்கு பிசையவும். முள்ளில்லாத மீனின் சதைப் பகுதியை நன்கு பிழிந்து எடுத்து நீர் இல்லாதவாறு செய்து கொள்ளவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு மற்றும் மீனின் சதைப்பகுதி ஆகியவற்றை நன்கு பிசைந்து கலவை போல் வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பின் மீது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி இந்த பிசைந்த கலவையை போட்டு நன்கு வதக்கவும். துருவிய தேங்காயை மேல் தூவவும். 10-15 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் நன்கு வதங்கிய பின் உப்பு சரி பார்த்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி கீழே இறக்கிவைத்தால், கானங்கத்த மீன் புட்டு தயார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் வடை

கிச்சன் கீர்த்தனா: நண்டு சூப்

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share