கோடையில் ஏற்படும் உடலின் வெப்பத்தைத் தணிக்க காலை நேரத்துக்கான சிறந்த சிற்றுண்டி இது. நரம்புகளுக்குப் புத்துணர்வை அளித்து, உடலுக்கு ஆற்றலைத் தரும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். வயிறு, வாய்ப்புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கம்புக்கு உண்டு. இதனுடன், உருளை சேருவதால் திடமான உணவாக இருக்கும். தொடர்ந்து இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிட்டு வருபவர்களுக்கு புதுவித சுவையைத் தரும் ஆரோக்கிய ரெசிப்பியாகவும் அமையும். Kambu Roti Recipe
என்ன தேவை?
கம்பு மாவு – 2 கப்
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
உலர்ந்த மாங்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
எப்படிச் செய்வது? Kambu Roti Recipe
மசித்த உருளைக்கிழங்குடன், கம்பு மாவு, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, சீரகத் தூள், மாங்காய்த் தூள், உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசைய வேண்டும். உருளையில் நீர் இருப்பதால், தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது. சப்பாத்தி போல தட்டி, தவாவில் போட்டு இரண்டு பக்கமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிச் சுட்டு எடுக்க வேண்டும்.