‘பிரேமம்’ இயக்குநருக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்: உதவிய பார்த்திபன்

Published On:

| By Monisha

kamalhassan surprises premam director

நேரம், பிரேமம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதால் படங்கள் இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பிற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வருத்தங்களை தெரிவித்தனர். kamalhassan surprises premam director

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், கமல் ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனது சொந்த குரலில் ஒரு பாடல் பதிவு செய்து கமலுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பல வழிகளில் முயற்சி செய்தும் அவரால் கமல் ஹாசனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவர்களிடம் இந்த பாடல் பதிவை கமல் ஹாசனிடம் சேர்க்குமாறு உதவி கேட்டுள்ளார்.

அல்போன்ஸ் புத்திரனின் ஆசையை நிறைவேற்றிய பார்த்திபன், அல்போன்ஸ் புத்திரன் குறித்து கமல் ஹாசன் பேசிய ஆடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஆடியோவில் கமல் கூறியதாவது, “அல்போன்ஸ் புத்திரனின் பாடலைக் கேட்டேன். அவருக்கு உடல் சுகமில்லை என்று சொன்னீர்கள். ஆனால் மனசு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அது அவரது குரலில் தெரிகிறது. இப்படியே சந்தோஷமாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எடுக்கும் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். டேக் கேர் அல்போன்ஸ்” என்று கூறியிருக்கிறார்.

கமல் அவர்களின் ஆடியோ குறித்து பார்த்திபன் எனது எக்ஸ் பக்கத்தில், “பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும், என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்…. கேட்கும் மாத்திரத்தில் புரியாது….

புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன். அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை. ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி ’எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன், நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா? என்றார்.

அவருக்கு உதவ கமல் சாரை அணுகினேன். அதற்களித்த பதிலது. வரிசை கட்டிக்கொண்டு படங்கள், சொந்த பட வேலைகள், பிக்பாஸ், அரசியல் பணிகள், இப்படி….

இப்படி அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை (நேற்றானதால்) மனப்பூர்வமாக பகிர்ந்தேன். அதை கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குனர் எனக்கு நன்றி அனுப்பினார். kamalhassan surprises premam director

உடல் நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது. இதை சொல்லக் காரணம் out of the way போய் கூட, அடுத்தவரின் புன்னகைக்கு காரணமாகலாம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

தற்போது அல்போன்ஸ் புத்திரன் குறித்து கமல் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

மலையாளத்தில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

பெண் வேடத்தில் நடிக்கும் சாண்டி மாஸ்டர்

Bigg boss 7 Day 45: விஷ்ணுவிடம் புரொபோஸ் செய்த பூர்ணிமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share