நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Prakash

நடிகர் கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குநர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று (நவம்பர் 23) மதியம் சென்னை திரும்பினார். இதையடுத்து, நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால், அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டாக்டர்கள் ஓய்வு எடுக்க சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்குப் பின்னால் அரசியலா: விஷ்ணு விஷால் பதில்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share