கன்னிப்பேச்சு எப்படி இருக்கும்? – டெல்லி புறப்பட்ட கமலின் தக் ரிப்ளை!

Published On:

| By christopher

kamalhaasan thug reply on his kannipechu

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் நாளை (ஜூலை 25) பதவியேற்க உள்ளனர். kamalhaasan thug reply on his kannipechu

மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் மு.சண்முகம், ஆகியாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

ADVERTISEMENT

இதனையடுத்து தேர்தலில் போட்டியின்றி தேர்வான திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நாளை டெல்லி நாடாளுமன்றத்தில் பதவியேற்க உள்ளனர்.

அதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டார்.

ADVERTISEMENT

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி எடுக்கவும், என் பெயரை பதிவு செய்யவும் செல்கிறேன். ஒரு இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும், கடமையுமாக இதை கருதுகிறேன். அந்த பெருமையோடுதான் டெல்லி செல்கிறேன்.

நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்லக்கூடாது. சில விஷயங்களை அங்கு பேசுவது போன்று இங்கே பேச முடியாது. இங்கே பேசுவது போன்று அங்கே பேச முடியாது” என கமல் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share