கமல் ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். அந்த படத்திற்கு thug life என்று டைட்டடில் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் மணிரத்னமும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் என்பதால் Thug Life படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு, பத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து Thug Life படத்தை தயாரிக்கிறது.
THUG LIFE படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அதிகாரப்பூவமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூவமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
