ரஷ்யா செல்லும் கமலின் தக் லைஃப்!

Published On:

| By christopher

Kamal Thug Life going to Russia

இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்த படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கின்றார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

தக் லைஃப் படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 24ஆம் தேதி தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முதற்கட்ட  படப்பிடிப்பில் கமல்ஹாசன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய நாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கார்த்திக் ராஜா

உடைந்த ராகுல் கார் கண்ணாடி : நடந்தது என்ன?

சர்தார் 2 படத்தில் ரத்ன குமார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share