டாம்க்ரூஸ்
வரும் ஜுன் 5ஆம் தேதியன்று மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்காக கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் என்று அதில் நடித்த பல கலைஞர்கள் ஒவ்வொரு மாநிலமாகப் பறந்து சென்று ‘புரோமோஷன்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். Kamal Speech about Simbu
அந்த வகையில் ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி மற்றும் அப்படத்தில் நடித்த நட்சத்திரப் பட்டாளத்துடன் தெலுங்கு நடிகர் தணிகலபரணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். Kamal Speech about Simbu
அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், படத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பேசினார். அந்த வரிசையில் சிம்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இவரோட படத்தைச் சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வர்றேன்’ என்றார். சிறிது இடைவெளிவிட்டு, ‘இவரோட சின்னவயசுல இருந்து பார்த்து வருகிறேன்’ என்று கூறிச் சிம்புவின் தோள்தட்டிச் சிரித்தார்.
”ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரும் என்னைப் போலத்தான். சினிமாவின் குழந்தை. அதனால் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் வேறு எதுவும் தெரியாது, சினிமாவைத் தவிர. ரயில் பயணம் போல, ரசிகர்களாகிய உங்களை நாங்கள் வந்தடைகிற வாகனம் சினிமா தான்.
சிம்புவாவது பள்ளிக்குச் சென்று பயின்றிருக்கிறார். ஆனால், நான் சினிமாவில் இருந்துதான் அனைத்துமே கற்றுக்கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளை சினிமாவில் தான் கற்றேன். நடிக்கும் திறமையை இதில் இருந்துதான் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
‘தக் லைஃப்’ வெளியானபிறகு இதனை வேறு பல மேடைகளிலும் கமல் சொல்வார் என்று நம்பலாம். அது சிம்புவின் ரசிகர்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்!
