ADVERTISEMENT

எனக்கு லவ் டார்ச்சர்… திரிஷா, அபிராமியை கலாய்த்த கமல்

Published On:

| By Selvam

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 5-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இந்த நிகழ்ச்சியில் நான் உங்களுடன் பேசுகிறேன். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். அதனை 2,000 ஆண்டுகளாக நாங்கள் கடைபிடித்து வருகிறோம். Kamal mocking trisha abhirami

இங்கு மேடையில் பேசிய நடிகை அபிராமி 11 வயதில் இருந்து என்னை சினிமாவில் பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னார். பக்கத்தில் திரிஷா உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதற்காகவாவது என்னுடைய வயதை சொல்லாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை, அதையெல்லாம் தாண்டி நான் வந்துவிட்டேன். இப்போது என்னால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

ADVERTISEMENT

நடிகைகள் அபிராமி, திரிஷா இருவரும் இந்த படத்தில் என்னைப் பார்த்து ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லவில்லை. ஆனால், தினமும் காலை, மாலை என எப்போது ஷூட்டிங் வந்தாலும், என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லும் ஒரே நடிகர் ஜோஜு ஜார்ஜ் தான். அவர் குட் மார்னிங் சொல்ல மாட்டார். எப்போதும் ஐ லவ் யூ மட்டுமே சொல்லுவார். அதனால் என் மனதை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார். கமலின் இந்தப் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தனர். Kamal mocking trisha abhirami

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share