ADVERTISEMENT

கமல் – மணி ரத்னம் “KH 234” டைட்டில் ரிலீஸ்!

Published On:

| By Kavi

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசனின் 234வது படம் உருவாகிறது.

கமல்ஹாசனும் மணி ரத்னமும் நாயகன் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம் என்பதால், KH 234 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

ADVERTISEMENT

KH234 படத்திற்காக கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்து விட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து  KH234 படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி வீடியோ அக்டோபர் 27 ஆம் தேதி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் கமல், மணி ரத்னம், ரவி கே. சந்திரன், ஏ.ஆர். ரகுமான், அன்பறிவு, ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு KH 234 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டில் நாளை ( நவம்பர் 6ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பிற்காக KH 234 படத்தின் ஸ்டண்ட் காட்சி மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. KH 234 படம் மணி ரத்னம் ஸ்டைலில் ஒரு பக்கா ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

KH 234 படத்தில் நடிகை த்ரிஷா, நடிகை நயன்தாரா, நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

அமலா பாலுக்கு டும்… டும்…டும்… : வைரலாகும் புகைப்படங்கள்!

காங்கிரஸ் போன்று பாஜக ஊழல் கட்சியல்ல : மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share