நடிகர் கமல் ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து, இத்தனை ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.
இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிமுக வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
நாட்டில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிகமானதால் மக்களை காக்க மீண்டும் இந்தியன் தாத்தா வருகிறார். அதன் பிறகு சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதே இந்தியன் 2 கதை சுருக்கம்.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜூன் மாதம் இந்தியன் 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜூன் மாதம் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாவதால், அது படத்தின் வசூலை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இதனால் ஜூன் மாதம் வெளியாக இருந்த இந்தியன் 2 படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக பொருட்செலவில், நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட இந்தியன் 2 படம் ரிலீஸ் தேதியை நெருங்கிய பிறகும் தொடர்ந்து சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படுவதால் படக்குழு கொஞ்சம் அப்செட்டில் உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும், மே மாதம் இறுதியில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: மே 15-க்கு ஒத்திவைப்பு!
Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?