ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
பல ஆண்டுகள் கழித்து தற்போது ஷங்கர் – கமல் கூட்டணியில் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 படம் உருவாகி உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பாரா” மற்றும் செகண்ட் சிங்கிள் பாடலான “நீலோற்பம்” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஜூன் மாதம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 படம் தற்போது ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வயதான கமல் நிற்க அவரது நிழல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நிற்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் ஆகியோர் இந்த படத்திற்கான வசனங்களை எழுதி இருக்கின்றனர். இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மோடியின் வெறுப்பு பேச்சு பிளவுகளை ஏற்படுத்தும்’ – மன்மோகன்சிங் தாக்கு!
‘கருடன்’, ‘கல்கி’ அனிமேஷன் சீரிஸ்… இந்த வார தியேட்டர் ஓடிடி லிஸ்ட் இதோ!
மன்னிப்பு வீடியோ… யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!
விவேகானந்தர் பாறையில் மோடி தியானம்; கடலுக்கு அடியில் கண்காணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்!