ADVERTISEMENT

இந்தியன் 2 ஆடியோ லான்ச் கெஸ்ட் இவரா..? 

Published On:

| By Kavi

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2.

இந்தியன் 2 படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் வரும் ஜூலை 12ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பாரா” மே 22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த பாடலின் அனிமேஷன் காட்சிகளை பார்க்கும்போது இந்தியன் 1 படத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற்றது போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் சுதந்திரப் போராட்டம் குறித்த ஒரு பிளாஷ்பேக் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா ரசிகர்களின் பேராதரவை பெற்று மில்லியன் வியூஸ்களை அள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

Image

அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் வரும் ஜூன் 1 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு சர்ப்ரைஸ் என்னவென்றால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியன் 2 ஆடியோ லான்ச்சில் கலந்து கொள்வார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்தியன் 2 படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் .

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கருடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் ஆகியோர் இந்த படத்திற்கான வசனங்களை எழுதி இருக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஸ்வீட் பிரியரே… ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?

சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: என்ன காரணம்?

ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?

டாப் 10 செய்திகள் : மோடி பிரச்சாரம் முதல் புஷ்பா 2 அப்டேட் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share