இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்… எப்போது முடிவடையும்?

Published On:

| By christopher

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டு முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கி 2019 ஆம் ஆண்டு அறிவித்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் பல இடையூறுகள், படப்பிடிப்பில் விபத்து, தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, நீதிமன்ற வழக்கு என ஏராளமான சிக்கல்களை கடந்து இந்தியன் – 2 இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதிலும் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இரண்டு படங்களாகிவிட்டன. இந்தியன்- 2, இந்தியன்-3 ஆக அவை வெளி வரவிருக்கின்றன.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் 69 ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. அது முடிந்ததும் கமல்ஹாசன் விசாகப்பட்டினத்தில் நவம்பர் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடந்த இந்தியன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தீபாவளிக்காக படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாம். அதன்பின் நாளை (நவம்பர் 15) படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சுமார் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இப்போது நடக்கும் படப்பிடிப்பு இந்தியன் 3 படத்துக்கானது இல்லை என்பது தான் ஆச்சர்யமான தகவலாக உள்ளது. இதுவரை எடுத்தவற்றிலேயே இந்தியன் 3 க்கான காட்சிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போது நடக்கும் படப்பிடிப்பு இந்தியன்-2 படத்துக்கானது என்கிறார்கள்.

ஏற்கனவே நடத்திய படப்பிடிப்பில் நினைத்தபடி படம் வந்துவிட்டது. இப்போது இரண்டு பாகங்களாக்கிவிட்டதால், இரண்டாம் பாகத்தின் இறுதி மற்றும் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டம் ஆகியவற்றைப் படமாக்க வேண்டியிருக்கிறதாம். இவை இந்தியன் 2 இல் இடம்பெறவேண்டியவை. அதற்காகத்தான் தற்போதைய படப்பிடிப்பு என்கின்றனர் தயாரிப்பு வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

கிடா : விமர்சனம்!

நேருவின் 135வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share