கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் இன்று (ஜூன் 5) வெளியாகாததால், கமல் ரசிகர்கள் ஓசூரில் அப்படத்தை கண்டுகளித்தனர். Kamal Haasan fans watches thug life
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று வெளியானது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது “தமிழில் இருந்து தான் கன்னடம் தோன்றியது” என கமல்ஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தக் லைஃப் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. கமல், சிலம்பரசன் ரசிகர்கள் மேள, தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து படத்தினை கண்டுகளித்தனர்.
கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், தும்கூர், மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் ஓசூருக்கு வந்து ஆட்டம், பாடத்துடன் சிறப்பு காட்சிகளை கண்டுகளித்தனர். ஓசூரில் உள்ள ஐந்து தியேட்டர்களில் தக் லைஃப் படம் திரையிடப்படுகிறது.