புரூஸ்லீ – ஜாக்கிசானை ஒப்பிட்டு படத்தில் வன்முறை காட்சி இடம்பெறுவது ஏன்? அதற்கான முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். kamal explain violence by bruce lee & jackie chan
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதனையொட்டி கமல், மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் ப்ரோமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் யூடியூபர் சுதிர் ஸ்ரீனிவாசனுக்கு அளித்த பேட்டியில் கமல் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பேட்டியில், ‘சண்டைக் காட்சிகளில் ரியாலிட்டி கொண்டுவரவேண்டும் என்பதற்காக உடல் ரீதியாக நீங்கள் வருத்திக் கொள்வீர்கள். கண்ணு பிதுங்கி, உதடு வீங்கி, ரத்தம் சொட்டி என தத்ரூபமான வன்முறையை அப்படியே எடுத்துக்காட்ட உங்களைத் தவிர வேறு யாரும் இருக்காங்களானு எனக்கு தெரியல… நீங்க எப்படி பார்க்கிறீங்க?’ எனக் கேள்வி எழுப்பினார்.
ஒரு கலைஞன் அப்படி நினைக்கக் கூடாது!
அதற்கு கமல், “நான் வன்முறையை வெறுப்பவன். அதை சிங்காரிக்கக் கூடாது. காஸ்மெட்டிக் சர்ஜரி பண்ணதுனால அது தப்பிலனு அர்த்தம் வரக்கூடாது. அதை விரும்பியும் செய்றது இல்ல.
’எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான்யா நமக்கு வேல. சமூகத்தப் பத்தி நாம கவலப்பட தேவையில்ல’னு ஒரு கலைஞன் நினைக்கக் கூடாது.
கிட்டத்தட்ட புரூஸ்லீக்கு நிகரானவர் ஜாக்கி சான். ஆனால் படம் ஜனரஞ்சகமா இருக்கனும் என்பதால் அவர் வன்முறைய ப்ரோமோட் பண்ண மாதிரி தான் எனக்கு தோனுது. புரூஸ்லி படம் பாத்தோம்னா, ’நானும் மிதிக்கலாம், ஆனா அவன் என்ன முதல்ல மிதிச்சிட்டானா?’ அப்படிங்குறது இருக்கும். அதனால பாத்து தான் பண்ணனும். எல்லோரும் புரூஸ்லீ ஆக முடியாதுனு தெரியும். ஜாக்கிசான் பாக்கும்போது சிரிப்போம். அது தப்புனு சொல்லல, அது அவரோட விருப்பம், ஆனா எனக்கு வன்முறைல விருப்பம் கிடையாது.
அதே நேரத்தில் படத்தில் வன்முறையை காட்டியே தான் ஆகனும். நீங்க குடிகாரன வச்சி படம் எடுக்க காரணம் என்ன? அது மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த தானே? அந்த மாதிரி தான் வன்முறையும். படத்துல வன்முறைய புகுத்துவது, அத பண்ணக்கூடாது என்பது தான் அர்த்தம்” எனக் கமல் தெரிவித்துள்ளார்.
