பல ஹீரோயின்களை உருவாக்கிய இயக்குனர் பிரியதர்ஷன் , பல ஹீரோக்களோடு நடித்து இன்னும் வருடம் ஒருமுறை அந்தக் கால நடிகர் நடிகைகளோடு சந்தித்து பார்ட்டி பண்ணும் லிசி ஆகியோரின் மகள் என்பதோடு அழகும் இருந்தும் கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு கேரியர் ரொம்ப நாளாக முதல் கியரிலேயே போய்க்கொண்டு இருந்தது .
வந்த படத்தில் நடிப்போம் என்று அவர் நடித்த , ஆனால் சின்சியராக நடித்த மலையாள படம் லோகா, எடுத்தவர்கள் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு மாபெரும் ஹிட் ஆனது. மலையாலத்திலேயே ஹிட் ஆன நிலையில் தமிழிலும் வந்து இன்னொரு ஓட்டம் ஓடியது . தென்னிந்தியா முழுக்க அந்தந்த மொழிகளில் வந்த படங்களுக்கு எல்லாம் அந்தந்த மாநிலத்திலேயே சவாலாக இருந்தது
விளைவாக லோகா படத்தின் மூலம் மலையாள சினிமா உலகின் பிரபல ஹீரோயின் ஆனார் கல்யாணி .
இந்த நிலையில் ‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று ப டங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல’ புகழ் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்போதே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்துக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.
லோகா படத்தின் வெற்றியால் இந்தப் படம் ஆரம்பிக்கப்படுகிறது? பேசாம லோகா நாயகின்னே வச்சிடலாமே ?
— ராஜ திருமகன்
