கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில், ஒரே நேரத்தில் 615 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று (மே 15) ஆஜராகினர். Kallakurichi riot case 615 appear in court
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்ற பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று கூறி பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது.
இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, கடலூர் விசிக மாவட்ட செயலாளர் திராவிட மணி உள்ளிட்ட 916 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர், 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 666 பேர் இன்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் ஆஜராக நீதிபதி ரவீனா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஒரே நேரத்தில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று 615 பேர் ஆஜராகினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. Kallakurichi riot case 615 appear in court