கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: மருத்துவமனை விரைந்த அமைச்சர்கள்!

Published On:

| By Selvam

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஜூன் 19) நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை சம்பவ இடத்திற்கு ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றமா? கயல்விழி இல்ல திருமண விழா கிளப்பிய புயல்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: ஸ்டாலின் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share