ADVERTISEMENT

கள்ளச்சாராயம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் கவலைக்கிடம்!

Published On:

| By Selvam

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும், 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இன்று (ஜூன் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19-ஆம் தேதி விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளக்குறிச்சி மரணம்: அமித்ஷாவிடம் ரிப்போர்ட்… அண்ணாமலை தகவல்!

கள்ளக்குறிச்சி மரணம்… சைலண்ட் மோடில் திரை பிரபலங்கள் : ஜெயக்குமார் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share