கள்ளச்சாராய மரணம்… இழப்பீடுகள் ஈடுகட்டாது: ஜி.வி.பிரகாஷ் காட்டம்!

Published On:

| By Selvam

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கணக்கணோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகரும் இசையமைப்பளருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.

நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ஜெயம்’ கொடுத்த முதல் படம்… ரவியின் சக்சஸ் ஃபார்முலா இதுதான்!

விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share