கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஐந்து பேர் உயிரிழந்த விவகாரத்தில், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற நபர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
இவரிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், ஜெகதீஷ், மகேஷ் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில், “கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை. வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்திருந்தார்.
கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர்!
பணப்பரிமாற்ற வழக்கு: செந்தில் பாலாஜி புதிய மனு… ED பதிலளிக்க உத்தரவு!