கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல எஸ்.பி சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி செந்தில் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி-யாக கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்!
மதுபான வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… டெல்லி நீதிமன்றம் உத்தரவு!