விருப்ப ஓய்வு கேட்கும் எஸ்.பி: காரணம் என்ன?

Published On:

| By Kavi

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மோகன்ராஜ் விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலாளர் அமுதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு பிறகு அங்கு எஸ்.பியாக பகலவன் நியமிக்கப்பட்டார். அவர் டிஐஜியாக  பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரகத்துக்கு மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

2023 ஜனவரி தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக மோகன்ராஜை காவல்துறை தலைமை நியமித்தது. கடந்த 10 மாதங்களாக கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய அவர் தற்போது விருப்ப ஓய்வு கேட்டுள்ளார்.

ஒரு எஸ்.பி விருப்ப ஓய்வு கேட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து நாம் விசாரித்தபோது,

ADVERTISEMENT

“எஸ்.பி மோகன்ராஜ் யாருக்கும் பயப்படாமல் பணி செய்யக்கூடியவர்.
மாவட்டத்தில் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ செல்வதற்கு, முன்பு இவர் சென்று விசாரித்து விடுவார், உயர் அதிகாரிகள் ஒரு புகார் பரிந்துரை செய்திருந்தால் அந்த புகாரை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், விசாரித்தாலும், இவரும் தனியாக விசாரிப்பார்.

அதனால்தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நல்ல வேலை செய்யக்கூடிய எஸ்பியை நியமிக்க வேண்டும் என்று செலக்ட் செய்து போட்டனர். 2023 ஜனவரி 4 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார் சரியாக 11 மாதங்கள் கடந்து விட்டது.

ADVERTISEMENT

இவர் 1987இல் உதவி ஆய்வாளராக காவல் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, எஸ்பி என பதவி உயர்வு பெற்று சென்னை சிசிபி, மதுரை வடக்கு துணை ஆணையராகப் பணியாற்றிவிட்டு கடைசியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளராக வந்தார்.

இவர் வந்ததிலிருந்து இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களின் தலையீடு அதிகமாகவே இருந்தது. எஸ்.பி மோகன்ராஜ் நினைத்தது போல் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை, ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களை பல நேரம் கடிந்துகொண்டார் .

சரி, காவல்துறையில் பணியாற்றியது போதும் எஸ்.பி யாக பணி செய்ய வாய்ப்புகள் கிடைத்ததே பெரிய விஷயம், ஓய்வு பெறக்கூடிய காலமும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது, இரண்டு பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

அவர்களுடன் சென்று பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு நிம்மதியாக காலத்தை கழிப்போம், நான் விருப்ப ஓய்வு பெறுவதால் அந்த இடத்திற்கு ஒரு இளைஞருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால்தான் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துள்ளேன் என மனம் விட்டு பகிர்ந்துள்ளார் தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடம்” என்கிறார்கள் கள்ளக்குறிச்சி போலீசார் தரப்பில்.

இந்த ஆட்சியில் போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு பேசு பொருளாகியுள்ளது.

உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்று தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.க்களும், கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வும் வெற்றிபெற்றனர். கள்ளக்குறிச்சி எம்.பி தொகுதியில் திமுக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

தலைநகரில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

தீபாவளிக்கு ‘போனஸ்’ லீவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share