எலக்‌ஷன் ஃபிளாஷ்: கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவா? ஸ்டாலின் முடிவு என்ன?

Published On:

| By Aara

Kallakurichi candidate Aadhav Arjuna?

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு நிறைவுப் பேச்சுவார்த்தை நாளை மார்ச் 2 ஆம் தேதி நடக்கிறது. இரு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என்று திமுகவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது விசிக.

‘தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருக்கும் இடது சாரிகளுக்கும் இரு தொகுதிகள், வட மாவட்டம் முழுதும் வலுவாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இரு தொகுதிகளா?’ என்று  ஒப்பிடும் சிறுத்தைகள்,  திமுகவிடம் 3 தொகுதிகளைக் கேட்டு வருகிறார்கள்.

அதுவும் குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியை மிகச் சமீபத்தில் கட்சியில் வந்து சேர்ந்து துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்காக திருமாவளவன் திமுகவிடம் கேட்டிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவுக்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் இருந்தே அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களிடம் முதல்வர் மௌனமாகவே இருந்திருக்கிறார்.

அதனால், விசிகவுக்கு அவர்கள் கேட்டபடி பொதுத் தொகுதியான கள்ளக்குறிச்சி தொகுதியைக் கொடுப்பதா, அதையும் ஆதவ் அர்ஜுனாவுக்காக கொடுப்பதா என்பது பற்றியெல்லாம் முதல்வர் ஸ்டாலின் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

பிப்ரவரி 29 ஆம் தேதியே திருமாவளவனை அறிவாலயத்தில் இருந்து அழைத்தார்கள்.  ஆனால் நேற்று அவர் கன்னியாகுமரியில் இருந்ததால்,  சென்னைக்கு வர இயலவில்லை. அதனால் மார்ச் 2 ஆம் தேதி விசிகவோடு திமுக தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு பேசுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

நெருங்கும் தேர்தல்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்!

இளைஞர்களின் மனங்கவர்ந்த ‘இருசக்கர’ வாகனம் இதுதான்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share