காளிதாஸ் ஜெயராமின் வருங்கால மனைவி… யார் அந்த மாடல்?

Published On:

| By Kumaresan M

நடிகர் ஜெயராம் மகன் காளிதாசுக்கும் பிரபல மாடல் தாரிணி காளிங்கராயருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

நடிகர் ஜெயராம் – பார்வதி தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. சமீபத்தில் மகள் மாளவிகாவுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து, மகன் காளிதாசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. காளிதாஸ் , தாரிணி காளிங்கராயர் என்ற மாடலிங் பெண்ணை  காதலித்து வந்தார். தொடர்ந்து, பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் , ஜெயராம் தமிழக முதல்வர் ஸ்டாலினை மனைவி மற்றும் மகனுடன் சென்று  சந்தித்து திருமண பத்திரிகை வழங்கினார். மகனின் கல்யாண முதல் பத்திரிகையை தமிழக முதல்வருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்காமல் தமிழக முதல்வரிடத்தில் முதல் பத்திரிகையை கொடுத்தது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காளிதாசை கரம் பிடிக்க போகும் தாரிணி காளிங்கராயர் கடந்த 2021 ஆம் ஆண்டு மிஸ். திவா அழகிப் போட்டியில் அழகிய கூந்தல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிறுவயதிலேயே இவரின் தந்தை இறந்து விட்டார். தாயார்தான் தாரிணி மற்றும் அவரின் தங்கையை வளர்த்துள்ளார்.

சென்னை எம்.ஓ .பி வைஷ்ணவா கல்லூரியில் படித்த இவர், 16 வயது முதல் மாடல்லிங்கில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தாரிணி காளிங்கராயர் மிஸ். தமிழ்நாடு பட்டத்தை வென்றார். தற்போது , தாரிணிக்கு 24 வயதாகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காளிதாசுவும் தாரிணியும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!

126 ஆண்டுகள் பழமையானது… எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் ரயில் நிலையம் அகற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share