கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, விரைவில் என் முடிவை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார். Kaliammal seeman name not mentioned
அதன்படி, நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் இன்று (பிப்ரவரி 24) அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அடுத்து அவர் எந்த கட்சிக்கு செல்லப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காளியம்மாளை தங்கள் பக்கம் இழுக்க திமுக, தவெக கட்சிகள் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக அன்பில் மகேஷ்… ஆதவ் அர்ஜூனா… காளியம்மாளை இழுக்க க்ளைமேக்ஸ் முயற்சி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (பிப்ரவரி 23) செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து காளியம்மாள் வெளியிட்டுள்ள விலகல் கடிதத்தில், கட்சியில் தன்னுடன் பயணித்த அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கை என பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியுடனான ஆறு வருடங்கள் பயணம் முடிவுக்கு வருவது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளித் தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அனைவருக்கும் கடைமைப்பட்டவளாக இருப்பேன் என்றும் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

இந்த விலகல் கடிதத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒரு இடத்தில் கூட காளியம்மாள் பயன்படுத்தவில்லை. அதேநேரத்தில், நாம் தமிழர் கட்சி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது பதவியை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், மறைந்த தமீழழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்தியுள்ளார்.
சீமான் குறித்து ஒரு வார்த்தை கூட காளியம்மாள் உச்சரிக்காதது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Kaliammal seeman name not mentioned