Kalavani: படத்துல வந்த குட்டி பொண்ணா இது?… ரசிகர்கள் ஆச்சரியம்!

Published On:

| By Manjula

கடந்த 2010-ல் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ‘களவாணி’. சற்குணத்தின் இந்த அறிமுக படத்தில் விமல், ஓவியா, இளவரசு, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்திருந்தனர்.

கிராமத்தில் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ, பள்ளி மாணவியாகிய ஹீரோயினை சந்திக்கிறார். சின்ன சின்ன களவாணித்தனம் செய்யும் அவர் ஹீரோயினை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதுதான் கதை.

இந்த படம் நடிகர் விமல் மற்றும் ஓவியாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முக்கியமாக காமெடி காட்சிகள் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருந்தது.

இதில் நடிகர் விமலுக்குத் தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. முதல் படத்திலேயே தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார்.

அதன் பிறகு தெனாவட்டு, ரகளைபுரம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

வசந்த் விஜய் நடித்த ‘தெரியாமல் உன்னை காதலிச்சிட்டேன்’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால், தொடர்ந்து சினிமாவில் வெற்றியை பறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை மனிஷா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும், தொடர்ந்து அதற்காக படித்துக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சினிமா உலகில் இருந்து படிப்பிற்கான உதவிகளை நடிகர் ஜெய் செய்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மனிஷாவின் இந்த உயரிய கனவினைப் பார்த்த ரசிகர்கள் அவரின் லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமேதி போன்று வயநாட்டிலும் ராகுல் வெளியேற்றப்படுவார் : மோடி

’இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவில் தவறில்லை’ : உயர்நீதிமன்றம்

கவினுடன் மோதும் சந்தானம்… பாக்ஸ் ஆபிஸ் ‘கிங்’காக மாறப்போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share