ரஜினிக்கு கலாநிதி கொடுத்த BMW x7: எத்தனை கோடி தெரியுமா?

Published On:

| By Selvam

kalanithi maran gift rajinikanth bmw x7 car

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடிக்கும் மேல் வசூல்  சாதனை செய்துள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக  தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று (ஆகஸ்ட் 31) சென்றார். அப்போது ரஜினிக்கு பரிசளிப்பதற்காக BMW i7, BMW x7 கார்களை அவர் வீட்டின் முன்பாக நிறுத்தினார்.

ADVERTISEMENT

ரஜினியை அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்து இரண்டில் ஒரு காரை தேர்வு செய்யுமாறு கூறினார். ஆச்சரியமான ரஜினி BMW x7 காரை தேர்ந்தெடுத்தார்.

பின்னர் காரின் கதவை திறந்து இருக்கையில் அமர்ந்தார். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது ரஜினி தேர்வு செய்த பிஎம்டபுள்யூ கார் குறித்து பலரும் இணையத்தில் தேடி வரும் சூழலில் இந்த காரின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம்:

ADVERTISEMENT

பிஎம்டபுள்யூ  X7 சொகுசு காரானது இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்  xDrive40i M Sport மற்றும் xDrive40d M Sport என இரண்டு மாடல்கள் உள்ளது. இதன் விலை ரூ.1.22 கோடியில் இருந்து ரூ.1.25 கோடியாக உள்ளது. இதில் ஆறு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

என்ஜின்

BMW TwinPower Turbo 6-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. இது 381 ஹெச்.பி திறனையும் 520 மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

இதனால் ஸ்டார்ட் செய்து 5.8 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்ட முடியும். இதில் 8 கியர்கள் உள்ளது. 249 கி.மீ வேகம் வரை காரை இயக்கலாம். ஒரு லிட்டருக்கு 11.29 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது.

சிறப்பம்சங்கள்

12.3 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்கிரீன் மற்றும் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது. இதன் மூலம் திரைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பார்க்கலாம்.

டிஜிட்டல் கீ, பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் மற்றும் 14-வண்ண சுற்றுப்புற விளக்குகள் உள்ளது.

ஸ்டாண்டர்ட் சீரிஸ் 2-ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன் சொகுசான கார் பயணத்திற்கு உறுதியளிக்கிறது.

இதில் Comfort, Efficient, Sport and Sport Plus என நான்கு ஓட்டும் நிலைகள் உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் (சிபிசி) மற்றும் டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (டிஎஸ்சி) மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது. இது டிரைவர் தூக்கத்தைக் கண்டறிதல் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.

செல்வம்

தன் பங்கிற்கு களமிறங்கிய டிவிஎஸ்…. புதிய அப்டேட் இதோ!

கவுதம சிகாமணி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share