கலையரசன் நடிக்கும் “ஹாட் ஸ்பாட்”: ஸ்பெஷல் என்ன?

Published On:

| By Selvam

கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திட்டம் இரண்டு’ மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ‘அடியே’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் அடுத்த படம் “ஹாட் ஸ்பாட்”.  இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், கௌரி கிஷன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

“ஹாட் ஸ்பாட்” படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும் போது,” சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம்.

ADVERTISEMENT

ஆனால், இது சமுதாயத்தில்  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம்.

அப்படிப்பட்ட  முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட் ஸ்பாட் படம் இருக்கும்.  திரைக்கு வந்த பிறகு இப்படம்  சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ADVERTISEMENT

ஏனென்றால் இது மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும்,  தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.   முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?

தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினை வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share