கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. kalaingar eldest son M.K.Muthu passes away!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்துவின் மறைவையொட்டி அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
