அனைத்து மகளிருக்கும் ரூ.1000 : பாஜக ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Kavi

kalaignar urimai thogai bjp protest

மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

மொத்தம் 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு  ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் தகுதியுள்ள பல பெண்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதுபோன்று தகுதியுள்ள பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்த நிலையில் 9 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்தச்சூழலில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வலியுறுத்தி தமிழக பாஜக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரண்டாவது மாதமாக இன்று (அக்டோபர் 14) கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கியில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

”லியோவில் சம்பவம் இருக்கு”: லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோள்!

INDvsPAK: களமிறங்கிய கில்… முதல் விக்கெட் வீழ்த்தி சிராஜ் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share