கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் காலமானார். அவரது நினைவு தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படும்.
அந்தவகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7-ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
இந்தப் பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?
விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: தங்கலான் ஆடியோ லாஞ்ச்… செகன்ட் சிங்கிள் அப்டேட்!