எத்தனை பெண்களுக்கு மாதம் ரூ.1000 : இறுதியாக அறிவித்த முதல்வர்!

By Kavi

|

Published on 11 Sep 2023, 4:22 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை மகளிருக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக, குடும்பத் தலைவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை சரிபார்க்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 11) முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும், அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் இது உள்ளது.

ADVERTISEMENT

ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தால் பயன் பெறுகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பாராட்டு ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமமாகும். அது போன்று சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்ட பெயரும் அதிகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

எனவே எந்த இடத்திலும்ம் எந்த சூழலிலும் எந்த ஒரு தனி நபருக்கும் சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.

ஏடிஎம் கார்டுகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வரும் 15ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில் பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய டோல் ஃப்ரீ எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில் தகுதியானவர்கள் என ஒரு கோடியே 6லட்சத்து 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்படியானால் மற்றவர்கள் கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

அப்படி அனுப்பினால் பெரும்பாலானோர் மன நிறைவு அடைவார்கள்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு 1000 ரூபாய், இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கலைஞர் உரிமை தொகை திட்டம் ஆகிய ஐந்து திட்டங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மக்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

பிரியா

கொசுவர்த்தி சுருள் : ட்விட்டரில் புயலைக் கிளப்பிய உதயநிதி

“இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை” – தாம்பரம் காவல் ஆணையர்

 

 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel