கலைஞர் 100 விழா: கிண்டியில் போக்குவரத்து மாற்றம்!

Published On:

| By Selvam

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா இன்று (ஜனவரி 6) மாலை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான விவிஐபி என்ட்ரி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி,  எஸ்விபி சாலை, ராஜ்பவன் வழியாக கிண்டி ரேஸ் கோர்ஸ் வரும் விவிஐபி வாகனங்கள்  ஹால்தா ஜங்ஷனிலும், அண்ணாசாலை வழியாக வரும் வாகனங்கள் இடது நுழைவு வாயிலிலும் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மூத்த கலைஞர்களின் வாகனங்கள், கிண்டி ரேஸ் கோர்ஸ் மெயின் போட்டிக்கோ வரை அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

மற்ற கலைஞர்களின் வாகனங்கள் வேளச்சேரி பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் வரை அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

நடிகர்களின் இருசக்கர வாகனங்கள் கிண்டி ரேஸ் கோர்ஸ்  இன்னர் ரிங் சாலை பார்க்கிங் இடத்தில் இருந்து எம்ஆர்சி ஊழியர் குடியிருப்பு வரை அனுமதிக்கப்படுகிறது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் விழா நடைபெறும் இடத்தை கடந்து செல்லும் அனைத்து வாகங்களும் 100 அடி சாலை, ஓஎம்ஆர் மற்றும் வேளச்சேரி வழியாக திருப்பி விடப்படுகின்றன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லை – திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம்: போக்குவரத்து சேவை எப்போது?

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு: மாட்டுவண்டியில் கண்டுகளிக்கும் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share