பாலிவுட்டின் நட்சத்திர நடிகை கஜோல், அண்மையில் திருமண உறவு குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு ஒரு ‘காலாவதி தேதி’ இருக்க வேண்டும் என்றும், அதை அவ்வப்போது ‘புதுப்பிக்க’ வேண்டும் என்றும் அவர் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கஜோல் நடிகை டுவிங்கிள் கன்னாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’.
இந்த நிகழ்ச்சியில், ட்விங்கிள் கண்ணா, “திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டுமா?” என்று கேட்டபோது, விருந்தினர்களாக பங்கேற்ற நடிகர் விக்கி கவுசல் மற்றும் கிரித்தி சனோன் இருவரும் இல்லை என்று பதிலளித்தனர். ஆனால், கஜோல் தயக்கமின்றி ‘ஆம்’ என்று பதிலளித்தார்.
இதற்கு டுவிங்கிள், திருமணம் வாஷிங் மெஷின் இல்லை’ என சொல்ல, தனது கருத்தில் கஜோல் உறுதியாக இருந்தார்.
“சரியான நேரத்தில் சரியானவரை மணப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? புதுப்பித்தல் விருப்பம் இருந்தால் நல்லது? கஷ்டப்பட வேண்டியதில்லை” என்று கஜோல் விளக்கமளித்துள்ளார்.
கஜோலின் இந்த வெளிப்படையான கருத்துக்கள், குறிப்பாக திருமண பந்தம் குறித்த அவரது பார்வை, நவீன உறவுகளின் சவால்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் முக்கியத்துவம் குறித்து பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இணையத்தில் பலரும் அவரது துணிச்சலை பாராட்டி வரும் நிலையில், ஒரு சிலர் அவரது கருத்துகள் மரபுக்கு முரணானது என்று கூறி வருகின்றனர்.
