நித்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? – கைலாசா சொன்ன தகவல்!

Published On:

| By Selvam

பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, தலைமறைவாக இருந்து வருகிறார். ஈகுவடார் நாட்டில் உள்ள நிலத்தில் தீவை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு நித்யானந்தா அங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. Kailasa denies nithyananda health

இந்தநிலையில், நித்யானந்தா சமாதி அடைந்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நித்யானந்தா உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மிகவும் பாதுகாப்பான உடல்நலத்துடன் இருப்பதாக கைலாசா நேற்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைலாசா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்து மதத்தின் உச்சப் போதகர் (SPH) நித்யானந்தா இறந்துவிட்டதாக இந்துத்துவ வெறுப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாக தகவல்களை பரப்பி வருகின்றன.

நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நித்யானந்தாவை இழிவுபடுத்தவும், தீங்கிழைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. மேலும், இந்த செய்தியால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது.

பல ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம், நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு உத்தியை கையாளுகின்றனர்.

இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா மீது 70-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நேரடி தாக்குதலால் தோல்வியடைந்தவர்கள், தற்போது மறைமுகமாக வதந்திகளை பரப்ப ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.

நித்யானந்தா உயிரிழந்தாக வெளியாகும் செய்தியை இந்து விரோத சக்திகள், கொண்டாடுவது அவர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Kailasa denies nithyananda health

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share