’காதலிக்க நேரமில்லை’ : முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published On:

| By Sharma S

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி – நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘என்னை இழுக்காதடி’ எனும் இந்தப் பாடல்  நாளை(நவ.22) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முழுநேர காதல் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, லால், வினய் ராய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் , மனோ, டி.ஜே.பானு, ஜான் கொக்கேன், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேவ்மிக் அரே ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த மே மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவானது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரதர்’ திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.

ஆக, அதைத் தொடர்ந்து ’காதலிக்க நேரமில்லை’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய அப்படக்குழு திட்டமிட்டது. ஆனால், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

மீண்டும் ஒரு சூப் சாங்! : தனுஷ் கொடுத்த அப்டேட்

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி இந்த மாநிலத்துக்காரரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share