கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்

Published On:

| By Selvam

Kache tum pulao Recipe

இன்று உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு என்ன செய்து கொடுத்து அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதை சத்தான உணவாகவும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கேற்ற உணவே இந்த  கேஷு தம் புலாவ். இந்த புலாவ், பேச்சுலர்கள் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
பிரிஞ்சி இலை – 2
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
பனீர் – 50 கிராம்
வெள்ளித்தாள் – தேவையான அளவு
முந்திரி – 20
சர்க்கரை – சிறிது
உப்பு, மஞ்சள்தூள் -தேவையான அளவு

அரைக்க:

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – 2
புதினா இலைகள்- 10
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – சிட்டிகை
கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், பாலில் ஊற வைத்த குங்குமப்பூ – தலா சிறிதளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

பனீரை சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கவும். உப்பு, சீரகத்தூள், சேர்த்து நன்கு தேய்த்து அழுத்திப் பிசறி, சிறுசிறு கோலிகளாக உருட்டி, வெள்ளித்தாளில் சுற்றிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைக்கவும். பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, உதிர் உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும். மீதி உள்ள நெய், எண்ணெய்விட்டு, சீரகம், பட்டை (உடைத்தது), பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.
இத்துடன் வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிவக்கும் வரை வறுத்து, பின் அரைத்த விழுதைச் சேர்க்கவும். சர்க்கரை, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சாதத்தைச் சேர்த்து உடையாமல் கலக்கவும். பனீரை புலாவில் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: குல்சா!

கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!

பி.எஸ்.என்.எலையும் வித்துருவாங்களா? : அப்டேட் குமாரு

பகுஜன் சமாஜ் தலைவர் ஆகிறாரா பா.ரஞ்சித்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share