நடிகை ஜோதிகாவிற்கு கடைசியாக வெளியான படம் உடன்பிறப்பே. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ஓர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதன் பிறகு “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபியின் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. அந்தப் படத்திற்கு காதல் – The Core என்று பெயரிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டு வெளியான சீதா கல்யாணம் படத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ஜோதிகா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காதல் The Core படத்திற்கான படப்பிடிப்புகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
எர்ணாகுளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தை விசிட் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வெறும் 34 நாட்களிலேயே படத்திற்கான மொத்த படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது.
அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தான் இந்த படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டது.
காதல் The Core படத்தை ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக் குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தகவல் என்னவென்றால்,
வரும் நவம்பர் 20-28ஆம் தேதி வரை நடக்க இருக்கும் கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் தான் “காதல் The Core” படம் முதலில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு வரும் டிசம்பர் மாதம் காதல்- The Core படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!