கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!

By Minnambalam

|

Published on 5 Jan 2024, 6:21 AM

Kaara biscuit Recipe in Tamil

கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிஸ்கட் செய்து அசத்த இந்த கார பிஸ்கட் ரெசிப்பி உதவும். குழந்தைகளுக்கேற்ற இந்த கார பிஸ்கட் அவர்களை நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து விரும்பும்போது சாப்பிடலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

மைதா மாவு, கடலை மாவு, கோதுமை மாவு – தலா அரை கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

மைதா மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாகச் சேர்த்து மூட்டை மாதிரி கட்டி ஈரமில்லாத, நன்கு உலர்ந்த பாத்திரத்தில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மாவு இருக்கும் உலர்ந்த பாத்திரத்தை வைக்கவும். பிறகு மூடி 20 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவைக்கவும் (இட்லி பானையிலும் வேகவைக்கலாம்).

வெந்ததும் கைகளால் உதிர்த்து மாவைச் சலித்து அத்துடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். நெய்யைச் சூடாக்கி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து, அரை இஞ்ச் தடிமனில் தட்டி, ஏதாவது மூடி (அ) அச்சு வைத்து வட்டமாக வெட்டி, சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சிவ்டா

கிச்சன் கீர்த்தனா: மொறு மொறு ஸ்வாலி

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel