‘காதல் என்பது பொதுவுடைமை’: ஜோதிகாவின் காதல் பதிவு!

Published On:

| By Kavi

kaadhal enbathu pothuvudamai jothika

லென்ஸ், தலைக்கூத்தல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’.

இரண்டு பெண்கள் காதல் கொள்வதுபோல் உள்ள இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை காதலர் தினமான நேற்று நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அதில் அவர், “இரண்டு வெவ்வேறான பாலினங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே காதல் அல்ல. அது இரண்டு தூய்மையான இதயங்களைப் பற்றியது. காதலை மதிப்பதன் மூலம் காதலர் தினத்தை கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாவில் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி  வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தான், ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தை தயாரித்துள்ளனர்.

kaadhal enbathu pothuvudamai jothika love post

இந்தப் படத்தில் ‘ஜெய்பீம்’ நாயகி லிஜோமோல், ரோகிணி, அனுஷா பிரபு, தீபா, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இராமானுஜம்

13 நாட்களில் தயாரான ‘கொன்றால் பாவம்’!

காலையிலேயே களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ: கோவை சென்னையில் சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share