எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்-தவெகவில் நாளை இணைகிறார்

Published On:

| By Mathi

KA Sengottaiyan

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை கே.ஏ.செங்கோட்டையன் இணைய இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய கே.ஏ.செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார் என நமது மின்னம்பலத்தில் முதன் முதலில் தெரிவித்தோம். விஜய்யை நாளை நேரில் சந்தித்து தவெகவில் இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன். அதற்கு முன்னதாக இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். அண்மையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். அவரும் திமுகவில் இணைந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share