ADVERTISEMENT

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர்; கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராக செங்கோட்டையன் நியமனம்!

Published On:

| By Mathi

Sengottaiyan Vijay TVK

நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் அலுவலகத்துக்கு சென்றார் செங்கோட்டையன்.

ADVERTISEMENT

விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, தமக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இணையான பொறுப்பு வழங்க வேண்டும்; கட்சி நிகழ்வுகள் தொடர்பாக நேரடியாக, உங்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விஜய்யிடம் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார். இதனை விஜய்யும் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து தவெகவின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராகவும் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share